நாமக்கல்
அஞ்சல் கோட்டத்திற்குட்பட்ட அஞ்சல் துறை ஓய்வூதியர்கள் குறைதீர்க் கூட்டம் வருகின்ற 15.05.17
திங்கள் கிழமையன்று காலை11.00 மணியளவில் நாமக்கல் -
திருச்சி சாலையில் அமைந்துள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
அது சமயம், நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஓய்வூதியர்கள்
இக்கூட்டத்தில் பங்கேற்று ஓய்வூதியம் சார்ந்த
தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். அச்சமயம்
ஓய்வூதியர்கள் அனைத்து ஆவணங்களையும் தங்கள் வசம் எடுத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு
நாமக்கல் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் திரு.ப.முருகேசன் அவர்கள் தெரிவித்துள்ளார்.