Pages

27 May 2016

Independence Day Stamp Design Competition - 2016




தபால்தலை வடிவமைப்புபோட்டி-2016

            நமது பாரத பிரதமர் அவர்களின் அறிவுறுத்தலின்படிசுதந்திரதினம் 2016 கொண்டாடும் விதமாக  தபால்தலைவடிவமைப்பு போட்டி இந்திய அஞ்சல் துறையால் தேசிய  அளவில்நடத்தப்படவுள்ளது.

இதன் தலைப்பு “இந்தியாவில் சுற்றுலா”  TOURISM IN INDIA” என்பதாகும்.  இப்போட்டியில் பள்ளி மாணவர்கள் உட்படஇந்தியக் குடிமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்இதில் கலந்துக் கொள்ள விரும்புபவர்கள் தங்கள் சொந்தவடிவமைப்பை அனுப்ப வேண்டும்.  மற்றவர்கள் வரைந்ததைநகல் எடுத்து அனுப்பக்கூடாது. வடிவமைப்பு மையினாலோ, வர்ணங்களாலோ வரையப்படிருக்க வேண்டும். கணினி மூலம் அச்சடிக்கப்பட்டதோ / பிரதிகளோ ற்றுக்கொள்ளப்படமாட்டாது.

பங்கேற்பாளர்கள்A4 வெள்ளை தாளிலோஓவியதாளிலோவரைந்து அனுப்பலாம். வடிவமைப்பின் பின்புறம்  அவர்களதுபெயர்வயதுதேசியம்முழு முகவரி (அஞ்சல் குறியீட்டுஎண்ணுடன்), தொலைபேசி/கைப்பேசி எண்மின் அஞ்சல் முகவரிஅவசியம் குறிப்பிட வேண்டும்.இந்த வடிவமைப்பு தங்களுடைய சொந்த உண்மையான(ORIGINAL)  வடிவமைப்பு என்றும்நகல் எடுக்கவில்லை என்றும்உறுதிமொழி படிவத்துடன் அனுப்ப வேண்டும்.  (The art work submitted is original and No copy right issues are involved)


 A4 அளவுள்ள தபால் உறையில் மடக்காமல்உறையின்மேல் “சுதந்திர தினம் -2016 தபால் வடிவமைப்பு போட்டி எனகுறிப்பிட்டிருக்க வேண்டும்.  இதை “விரைவு அஞ்சல்” (SPEED POST)  மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும்.  தபால் அனுப்பவேண்டிய முகவரி

To
            ADG(PHILATELY)
            Room No.108(B)
            Dak Bhawan,  Parliament Street,
            New Delhi-110001.              
           தபால் சென்றடைய வேண்டிய கடைசி நாள்31.05.2016

இறுதி நாளுக்கு பிறகு வந்தடையும் போட்டி படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

பரிசு விபரம்:
முதல் பரிசுரூ.10000/-
இராண்டாம் பரிசுரூ.6000/-
மூன்றாம் பரிசுரூ.4000/-

           தேசிய அளவில் பரிசு பெறும் படைப்புகள் தபால்துறைவெளியிடும் அஞ்சல் தலைகளிலோமுதல் நாள்  உறையிலோ,அல்லது அஞ்சல் தலை தகவல் கையேடு போன்றவற்றில்தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்படும்.

                மேலும் விபரங்களுக்கு அருகாமையில் உள்ளஅஞ்சலகத்தை அணுகவும்.

     
                             .முத்துராஜ்,
                      அஞ்சல் கண்காணிப்பாளர்,
                         நாமக்கல் அஞ்சல்கோட்டம்,
                          நாமக்கல்-637001.

No comments:

Post a Comment