தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் தன் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீ அணைப்பு வீரர் பதவிகளுக்கான பொது தேர்வு 2017 ஐ விளம்பர எண் 117 மூலம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் நாமக்கல் கோட்டத்தில் நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய தலைமை அஞ்சலகங்கள் வேலூர் , எடப்பாடி, சங்ககிரி துர்க் ஆகிய துணை அஞ்சலகங்களில் விநியோகிக்கப்படுகிறது. விண்ணப்பத்தின் விலை ரூ 30/----. தேர்வுக்கட்டணம் ரூ 135/--- ஐ அனைத்து அஞ்சலகங்களிலும் செலுத்தலாம். விண்ணப்பங்கள் விரைவில் சென்று அடைய ஸ்பீட் போஸ்ட் (விரைவு அஞ்சல்) வசதியை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறது . விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் 22.02.2017. எழுத்து தேர்வு நடைபெறும் நாள் 25.05.2017.போட்டி தேர்விற்கு தயாராகும் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .
இப்படிக்கு
ப.முருகேசன்
அஞ்சலக கண்காணிப்பாளர்
,
நாமக்கல் கோட்டம்,
நாமக்கல்
- 637 001.
No comments:
Post a Comment