Pages

10 March 2012

சென்னை பல்கலையில் எம்எஸ்சி சைபர் தடயவியல்

விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சிக்கு ஏற்ப தொழில்நுட்ப ரீதியான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக உலகை ஆட்டிப்படைக்கும் இன்டர்நெட் மூலமாக நடைபெறும் குற்றங்கள் இப்பட்டியலில் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்டர்நெட் குற்றங்களை பட்டியலிடுவதே சிரமமாக உள்ளது. ஏனெனில் நாளுக்கு நாள் குற்றங்களின் வகைகளும் மாறுபட்டுக்கொண்டே செல்கிறது. இந்தியாவை பொறுத்தவரை சைபர் குற்றங்கள் சமீபகாலங்களில் மிகவும் அதிகரித்துவிட்டன. 


இது தொடர்பான தகவல்கள் கம்ப்யூட்டரில் பாதுகாத்து விசாரணையின் போது கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படுகின்றன. சைபர் குற்றங்களை பற்றிய தகவல்களை திரட்டும் போது கவனமுடன் செயல்பட வேண்டும். சேகரிக்கப்படும் தகவல்கள் துல்லியமானதாக இருக்க வேண்டும். இது பற்றி கற்றுத் தருவதே சைபர் பாரன்சிக்ஸ் படிப்பாகும். விஞ்ஞான முறைப்படி தகவல்களை திரட்டுவதும், டிஜிட்டல் முறையில் அவற்றை பாதுகாப்பதும் கற்றுத் தருகின்றனர். இது தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வரும் போது உதவ, சைபர் பாரன்சிக்ஸ் கற்றிருக்க வேண்டியது அவசியம். 

சென்னை பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி. சைபர் பாரன்சிக்ஸ் அண்ட் இன்பர்மேஷன் செக்யூரிட்டி என்ற படிப்பு வழங்கப்படுகிறது. டிஜிட்டல் தகவல்களை மாற்றியமைப்பதன் மூலம் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதால் சைபர் பாரன்சிக்ஸ் படிப்பின் அவசியம் தற்போது உணரப்படுகிறது. இத்துறை படிப்பை முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் துப்பறியும் நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. மாணவர்கள் மத்தியிலும் இப்படிப்புக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இப்படிப்பு பற்றிய விவரங்கள், மாணவர் சேர்க்கை தகுதிகள், விண்ணப்பிக்க வேண்டிய காலம் உள்ளிட்ட விவரங்களை சென்னை பல்கலைக்கழகத்தை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment