Pages

4 April 2012

தபால் துறை சார்பில் 1000 ஏ.டி.எம்.கள் திறக்க முடிவு

INDIA POST
புதுடில்லி: வங்கிகள் அமைத்துள்ள ஏ.டி.எம். போன்று இந்திய தபால்துறையும் ஏ.டி.எம்.க்‌களை துவக்க திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக 6 மாநிலங்களில் துவக்கப்படவுள்ளது. தேசியமயமாக்கப்பட்ட மற்றும் பொதுத்துறை வங்கிகள் , துரித பணசேவைக்காக ஏ.டி.எம். மையங்களை முக்கிய நகரங்களில் அமைத்துள்ளன. அதனைப்போன்று இந்திய தபால்துறையும் வணிக ரீதியில், சேமிப்பு கணக்கு மற்றும் இதர திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏ.டி.எம். மையங்களை பொதுமக்கள் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

இந்திய தபால்துறை நவீன தொழி்ல்நுட்ப முறையில் துவக்கப்படவுள்ளன. ஒருங்கிணைக்கப்பட்ட வங்கிகளைப்போல் தபால்துறையினையும் ஒருங்கிணக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வங்கிகளைப்போன்று ஏ.டி.எம். மையங்கள் துவக்கப்படவுள்ளது. முதற்கட்டமாக அசாம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தமிழகம் கர்நாடகா என 6 மாநிலங்களில் 1000 ஏ.டி.எம். மையங்கள் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

இது குறித்து தபால்துறை செயலர் மஞ்சுளா பிரஸ்ஹர் கூறியதாவது: முதல்கட்டமாக 6 மாநிலங்களில் 1000 ஏ.டி.எம்.க்கள் இந்தாண்டு இறுதியில் துவக்கப்பட உள்ளது. வங்கிகளைப்போன்று இதில் பல்வேறு சலுகைகளை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இதற்காக இன்போசி்ஸ், டி.சி.எஸ். ரிலையன்ஸ் உள்ளிட்ட ஐந்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுககப்பட்டு வருகிறது என்றார்.


Source : Dinamalar Dt. 02.04.12

No comments:

Post a Comment